Close

சபையின் பெயர்

ஒரு பாவியின் இரட்சிப்பு பூரணமாக தேவ கிருபையினால் உண்டாகிறது என்பதை கிருபை என்ற சொற்பதமும் - எல்லாபாஷைக்காரருக்கும், எல்லா இனத்தவருக்கு ம் இரடசகராகிய இயேசுக்கிறிஸ்துவைக்குறித்தும் அவரது சுவிசேஷத்தைக்குறித்து ம் அறிவிக்கிற சபையாக இருக்கிறது என்பதை சுவிசேஷம் என்ற சொற்பதமும் - தற்போது தமிழர்கள் மத்தியில், தமிழில் ஊழியங்கள் நடைபெறுகிறது என்பதை தமிழ் என்ற சொற்பதமும் - தேவகிருபையைக்கொண்டு கர்த்தராகிய இயேசுக்கிறி ஸ்துவின் இரத்தத்தினால் பாவங்களிலிருந்து மீடகப்பட்ட தேவ ஜனங்களின் ஐக்கி யம் என்பதை திருச்சபை என்ற சொற்பதமும் வெளிப்படுத்துகிறது. (அத்துடன் கிருபை சுவிசேஷ திருச்சபையின் போதகர் நாவாய் மனோகரன் 1981 – 1990 ம் ஆண்டுகள் வரையிலும் இலங்கையிலுள்ள மன்னார் பகுதிகளில் முத லில் கிறிஸ்துவுக்காக இளைஞர் சங்கத்துடனும் பின்பு மன்னார் கிறிஸ்தவ ஐக்கி யம் என்ற பெயருடன் இயக்கி பின்பு கிருபை சுவிசேஷ சபை என்று பெயர்மாற்ற ப்பட்ட சபையில் செய்த ஊழியங்களை நினைவுபடுத்துவதாகவும் திருச்சபையின் பெயர் அமைந்திருக்கிறது)
குறிப்பு: (ஆங்கிலத்திலும்; ஊழியங்கள்; ஆராதனைகள்; இடம்பெறுகிறது. எங்கள் கிருபை சுவிசேஷ ஆங்கில சபை (புசயஉந புழளிநட நுபெடiளா ஊழபெசநபயவழைn ) இணையத்தளத்தை பார்வையிடவேண்டுமாகில். புசயஉந புழளிநட நுபெடiளா ஊழபெசநபயவழைn என்ற பகுதியில் பார்வையிடலாம்.

திருச்சபையின் சின்னம்

சபைச்சின்னத்தின் அர்த்தம். சின்னத்திலுள்ள புத்தகம் பரிசுத்த வேதாகமத்தின் அடையாளாமாகவும், புறாவடிவ மான பறவை பரிசுத்த ஆவியின் அடையாளமாகவும், சிலுவை கிறிஸ்துவின் மர ணத்தினால் மட்டும் உண்டாகும் இரட்சிபின் அடையாளமாகவும் இருக்கின்றன. மேலும், பரிசுத்தாவியை விசுவாசிக்கிற சபை என்பதை புறாச்சின்னம் பெவளிப்படு த்துகிறது. பரிசுத்தவேதாகமமே முற்றுப்பெற்ற பரிபூரணமான தேவனின் வெளிப்ப டாக இருக்கிறதென்பதை சபை விசுவாசிக்கிறது என்பதை பரிசுத்த வேதாமத்தின் சின்னம் வெளிப்படுத்துகிறது. மனிதன் தனது பாவவிமோசனத்துக்காக எதுவுமே செய்ய வேண்டியதில்லை, பாவத்திலிருந்து மனிதனை மீட்கும்படியாக சிலுவை யிலே கிறிஸ்து தன் ஜீவனை க்கொடுத்தார் என்பதையும், சிலுவையைக்குறித்தே மேன்மைபாராட்டுகிறோம் பிரசங்கிக்கிறோம் என்பதையும், சிலுவைச்சின்னம் வெளி ப்படுத்துகிறது.

நிர்வாகம

பாஸ்டர்.

மனோகரன் யோசேப் கிருபை சுவிசேஷ திருச்சபையின் பாஸ்டராக இருக்கிறார். அவர் பிறந்த ஊராகிய நாவாந்துறை என்ற இடத்தின சுருக்கமான பெயரான நாவாய் என்ற பெயரைச்சேர்த்து ‘நாவாய் மனோகரன்” என்று தமிழ் கிறிஸ்தவர் கள் மத்தியில் அழைக்கப்படுகிறார் – அடையாளம் காணப்படுகிறார். இவர் 1979-1983 ஆண்டுகளில் இலங்கையிலுள்ள கிறிஸ்துவுக்காக வாலிபர் சங்கத்திலும், பின்பு மன்னார் கிறிஸ்தவ ஐக்கியத்தின் ஆரம்ப கர்த்தாங்களில் முக்கியமானவா ராகவும், அதன் ஊழியக்காரர்களின் ஒருவராகவும் இருந்தவர். அதைத்தொடாந்து மன்னார் கிறிஸ்வ ஐக்கியம் 1988ம் ஆண்டில் கிருபை சுவிசேஷ திருச்சபையாக பெயர் மாற்றப்பட்ட பின்பும் அதன் ஊழியக்காரர்களின் ஒருவராக இருந்தவர்.

இங்கிலாத்திலுள்ள ப்றைன்ரன் (டீசiபாவழn – நுபெடயனெ) என்ற இடத்துள்ள கல்வாரி சுவிசேஷ திருச்சபையில் (ஊயடஎயசல நஎயபெநடiஉயட ஊhரசஉh) 1986-1988 ஆண்டுகளில் இறையியல் கற்றவர், பாஸ்டராக பயிற்சி பெற்றவர். 1990 – 1992 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசத்தில், ஆநவசழிழடவையn வுயடிநசயெஉடந என்ற திருச்சபையினால் நடத் தப்படும், ‘லண்டன் சீர்திருத்த பாப்டிஸ் வேதாமக் கல்லூரியில்” (டுழனெழn சுநகழசஅநன டீயிவளைவ ளுநஅiயெசல) இறையியல் கற்றவர்.


இவரது மனைவின் பெயர் லுசிண்டா, பிள்ளைகளின் பெயர்கள் ஏசாயா, மத்தியாஸ், சகாரியா, நோவா.

உதவிக்காரர்கள்.

1) ரவி ஜூவநாயகம்.

2) ஜான்ஸ் தேவதாஸ்.

3) விமல் செல்வநாயகம்.

4) ஜஸ்டின் தேவசுதன்.

5) ஞானசீலன்.

6) அன்ரனி பிற்றர்.

7) பாலன்.

 

Deacon_ravi-1 Deacon_gnana-1 Deacon_devasuthan-1 Deacon_vimal-1 Pastor_mano-1

அர்ப்பணிப்பு

கிருபை சுவிசேஷ தமிழ் திருச்சபையின் அர்ப்பணிப்பு:

1) தேவஉறவு.. ஒவ்வொரு விசுவாசியும் வேதவாசிப்புக்கூடாக, ஜெபவாழ்க்கைக்கூடாக. கீழ்படி வான பரிசுத்த வாழ்க்கைக்கூடாக, தேவஉறவில் நிலைத்திருப்பது.
2) குடும்ப உறவு. விசுவாசிகள் அனைவரும், தேவவார்த்தைகள் கற்றுக்கொடுக்கிறபடி குடும்பத்துக் குரிய கடமைகளை நிறைவேற்றுவது, குடுமப உறவுகளை ஆரோக்கியப்படுத்துவ து, மகிழ்விப்பது. குடும்பமாக தேவனை மகிமைப்படுத்துவது, ஆராதிப்பது.
3) சபை உறவு. விசுவாசிகள் அனைவரும் சபையில் இணைந்திருப்பது, ஐக்கியமாயிருப்பது, சபை யின் ஆவிக்குரிய காரியங்களில் தரித்திருப்பது, சபை ஊழியங்களில் ஈடுபடுவது, சபையாக கூடி தேவனை ஆராதிப்பது.
4) மற்ற உறவுகள். விசுவாசிகள் அனைவரும் தேவவார்த்தைகள் கற்றுக்கொடுக்கிறபடி பிறருடன், சமூ கத்துடன், அரசாங்கத்துடன் நல்லுறவுகளை பேணுவது, அமைதியை சமாதான த்தை நீதியை செயற்படுத்துவதும் நிலைநாட்டுவதும்.
5) கர்த்தரின் மேலணை. விசுவாசிகள் அனைவரும் மத்தேயு 28:19-20. கர்த்தர் கொடுத்த மேலாணைகளை நிறைவேற்றுவது. (சுவிசேஷப்பணி - சீடாராக்குவது - தேவகற்பனைகளை கைக் கொள்ளுவது - உபதேசிப்பது)
6) சாட்சியான வாழ்வு. விசுவாசிகள் அனைவரும் கிறிஸ்துவின் சாயலை பிரதிபலிக்கிற பரிசுத்தத்தை ஆவியின் கனிகளை நற்பண்புகளையுடையவர்களாயிருப்பது, யாவருக்கும் நன் மைகளை நற்கிரிகளைச் செய்து கிறிஸ்துவின் சாட்சிகளாயிருப்பது.
7) பாடுகளை சகிப்பது. விசுவாசிகள் அனைவரும் கிறிஸ்துவின் நிமித்தம், சத்தியத்தினிமித்தம், விசுவாச வாழ்க்கையில் வருகின்ற போராட்டாங்களை, பாடுகளை உபத்திரவங்களை ஏற் றுக்கொள்ளவது சகிப்பது.
8) மறுவாழ்வு. விசுவாசிகள் அனைவரும் தேவவார்த்தைகளின்படி பரிசுத்த ஜீவியம் ஜீவித்து, தேவசித்ததத்துக்கு சத்தியத்தியத்துக்கு கீழ்படிந்து, கர்த்தரின் வருகைக்கும் மறு மைக்கும் ஆயத்தப்படுகிற வாழ்க்கை வாழ்வது.

இடத்தின் சூழல் / Our Community

பல்லின மக்களினால் – பல பாஷைக்காரர்களினால் - பல மதத்தினர்களினால் நிறைந்த இடம். சில கிறிஸ்தவ சபைகளையும், இஸ்லாமியரின் சில மசூதிகளை யும், சில இந்து ஆலயங்களையும், சீக்கிய ஆலயங்களையும் கொண்டிருக்கிற இடம். அதுமட்டுமல்லாமல் ஆலயங்களுக்கு செல்லாதவர்களினாலும் இறை நம்பி க்கையற்றவர்களினால் நிறைந்திருக்கிற இடம். குறிப்பாக கிறிஸ்துவையும் - அவ ரை அறிவிக்கிற பரிசுத்த வேதாகத்தையும் அறியாத ஏற்றுக்கொள்ளாத மக்களி னால் நிறைந்திருக்கிற இடமாகும். இப்பகுதிகளில் அதிக தமிழ் மக்களும் வாழ் கிறார்கள். பொதுவாக கனடாவில் வாழும் தமிழர்களில் அதிகமானோர் இந்துக்க ளாவர். தமிழ் கிறிஸ்தவர்கள் குறைந்த வீதமானவர்களாக இருக்கிறபோதும். அதி கமானோர் பாரம்பரிய சபைகளையும் பெந்தேகோஸ் கரிஸ்மன்ரிக் சபைகளையும் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இச் சபையினர்கள் மத்தியிலும், புறமார்க்கர் த்தவர்கள் மத்தியிலும், நாஸ்திகர்கள் மத்தியிலும் கிருபை உபதேசங்களுடன் எங்கள் கிருபை சுவிசேஷ தமிழ் திருச்சபை விளங்குகிறது

விசுவாசக்கொள்கை

1) பரிசுத்த வேதாகமம். 

பழைய புதிய ஏற்பாட்டிலுள்ள 66 புத்தகங்களை பரிபூரண தேவவார்த்தைகள் என்று விசுவாசிக்கிறோம் .


2) உண்மையும் உயிருமுள்ள தேவன்.

ஒரேயொரு உயிருள்ள உண்மையுள்ள தேவனை விசுவாசிக்கிறோம். அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக திரித்துவமுள்ளவர் என்பதை விசுவாசிக்கிறோம்.


3) இயேசுக்கிறிஸ்து

தேவகுமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவின் இறைத்தன்மையை, கன்னிகையிடத்தில் பிறந்தவர், பாவநிவாரணப்பலியாக சிலுவையில் மரித்தவர், உயிர்த்தெழுந்து பர மேறியவர், இரண்டாம் தடவை வருபவராகவுமிருக்கிறார் என்பதை விசுவாசிக்கி றோம்.


4) பரிசுத்த ஆவி. 

பரிசுத்த ஆவியின் இறைத்தன்மையையும், கிரியைகளையும், ஆவியின் கனியில் வளர்ப்பவர் என்பதையும், தமது சித்தத்தின்படி தேவ நோக்கங்களை நிறைவேற்ற வரங்களைக்கொடுக்கிறவர், அவைகளில் சில வரங்கள் நிரத்திரமானவைகள் என் பதையும் விசுவாசிக்கிறோம்.


5) தேவதூதர்கள்.

தேவனை சேவிக்கிறவர்கள், தேவனின் பணிவிடைக்காரர்கள், தேவனின் அதிகா ரத்துக்குட்பட்டவர்கள், மனிதர்களினால் ஆராதிக்கப்படவேண்டியவர்களில்லை என் பதை விசுவாசிக்கிறோம்.


6) சாத்தான்.

வீழ்ந்துபோன தேவதூதன், தேவனுக்கெதிராக கலகம் பண்ணினவன், பாவத்தின் அதிபதி, தேவன் சாத்தானுக்கும் அவன் தூதர்களுக்கும் முடிவான நியாயத்தீர்ப் பை வைத்திருக்கிறார் என்பதையும் விசுவாசிக்கிறோம்.


7) மனிதன்.

தேவசாயலாகவும் ரூபமாவும், ஆணும் பெண்ணுமாக படைக்கப்பட்டவன், பாவம் செய்து தேவமகிமையை இழந்தவன், தன்னைத்தானே இரட்சித்த்துக்கொள்ள முடி யாத நிலையில், ஆவிக்குரிய மரணத்தையும் சரீரத்துக்குரிய மரணத்தையும் சம் பாதித்தவனாக இருக்கிறான் என்பதையும் விசுவாசிக்கிறோம்.


8) இரட்சிப்பு.

இரட்சிப்பானது தேவகிருபையினால் உண்டாகும் விசுவாசத்தினாலுண்டாகிறது,

கிறிஸ்துவின் மரணத்தினால் சம்பாதிக்கப்பட்டது, இரட்சிக்கப்பட்டவர்கள் இரட்சி ப்பை இழக்கமாட்டார்கள் என்பதையும் விசுவாசிக்கிறோம்.


9) இனிவரப்போகிற காரியங்கள்.

இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும், மரித்தோரின் உயிர்த்தெழுத லையும் மீட்கப்பட்டோர் நித்திய ஆசீர்வாதத்துக்கும், துன்மார்க்கர் நித்திய தண் டனையும் நியாயத்தீர்ப்பின் பின்பு அடைவார்கள் என்பதையும் விசுவாசிக்கிறோம்.


10) சுயாதீன சபை.

சபையானது மீட்கப்பட்டவர்களின் கூட்டம் – ஐக்கியம், கிறிஸ்துவே சபையின் தலைவராக இருக்கிறார், அவர் மேயப்பரை மூப்பர்களை உதவிக்காரர்களை தேவவார்த்தைகளை உபதேசிக்கவும்; பிரசிங்கிக்கவும், சபையை வழிநடத்தவும் நிர்வாகிக்கவும் நியமித்திருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறோம்.


11) திருச்சடங்குகள்.

கிறிஸ்து இயேசு புதிய ஏற்பாட்டு சபைக்கு இரண்டு திருச்சடங்குகளை நியமித் திருக்கிறார். அவைகள் பின்வருமாறு:


அ) ஞானஸ்நானம்.

கிறிஸ்துவை இரட்சகராக ஏற்று, மறுபிறப்பின், பாவ மன்னிப்பின் நிச்சியத்தை பெற்றவர்களுக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் முழுக்கு ஞான ஸ்நானம் கொடுக்கப்படவேண்டும் என்பதை விசுவாசிக்கிறோம்.


ஆ) திருவிருந்து.

கர்த்தர்pன சரீரத்தையும், இரத்தத்iயும். மரணத்தையும் நினைவுகூரும்படி, இருமூ லகங்களான அப்பத்துடனும் திராட்சைரசத்துடனும் மீட்பக்கபட்டவர்களினால்; அனு ஷ்டிக்கப்படுவது என்பதை விசுவாசிக்கிறோம்.


12) கிறிஸ்தவ ஆராதனை. 

சபைகூடி பாடித்தோத்தரித்து துதித்தல், ஜெபித்தல், வேதம்வாசித்தல், போதித்தல்;, பத்திலொன்றை காணிக்கைகளை செலுத்துதல், விசுவாசிகளின் ஐக்கியம் ஆகிய வற்றை உள்ளடங்கியதே ஆராதனை என விசுவாசிக்கிறோம்.

13) நாட்டின் அரசு.

தேவன் அரசாங்கத்தை நியமித்தார், கிறிஸ்தவர்கள் அதிகாரங்களுக்காக, கலக மில்லாத அமைதியான வாழ்வுக்காக ஜெபிக்கவேண்டும், சத்தியத்துக்கு முரண்ப டாதபடி சட்டங்களுக்கு கீழ்படியவேண்டும், என்பதை விசுவாசிக்கிறோம்.


14) சபையில் பெண்கள். 

பெண்கள் தேவனுடைய சாயலாகவும், ரூபமாகவும், ஆதாமின் மகிமையாகவும் படைக்கப்பட்டவர்கள், பாடிப்போற்றி ஸ்தோத்தரித்து, ஜெபித்து, வேதம் வாசித்து , பெண்களுக்குரிய ஊழியங்களை செய்து, கர்த்தரை மகிமைப்படுத்தி தொழுது கொள்ளவேண்டும் என்பதை விசுவாசிக்கிறோம்.

15) விவாகம்.

விவாகமானது தேவனால் தரப்பட்ட ஆசீர்வாதம்;, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைவதை உள்ளடக்கியது, விசுவாசிகள் விசுவாசிகளை விவாகம் பண்ணவே ண்டும், விவாகரத்தை தேவன் வெறுக்கிறார் என்பதை விசுவாசிக்கிறோம்.


16) கிறிஸ்தவ சுயாதீனம்.

இது இரட்சிப்புக்கு அவசியமற்ற இரண்டாம் தர விடயங்களை குறித்து நிற்கிறது.

ஒரு விசுவாசி தன் வாழ்க்கை;குரிய சில காரியங்களைக்குறித்து எடுக்கவேண்டிய முடிவுகளை சத்தியத்துக்குமுரணடபடாமல் மற்றவர்களுக்கு இடறலற்ற முறையில் தீர்மானிப்பதுக்கு சுயாதீனம் உண்டென்பதை நம்புகிறோம்.  (உ-ம்:- கலாச்சார விழுமியங்கள், உடைகள், உணவுகள், விசேட நாட்கள், பொழுதுபோக்குகள்)

வரலாறு

கிருபை சுவிசேஷ தமிழ் திருச்சபையின் வரலாற்றுச் சுருக்கம்.

1992 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ரொறோண்ரோ பட்டணத்திலிருக்கிற யாவீஸ் வீதி பாப்டிஸ் (துயசஎளை ளுவசநநவ டீயிவளைவ ஊhரசஉh) திருச்சபையின் ஒத்தாசையுடன், தேவ கிருபையினால் போதகர் (நாவாய்) மனோகரன் யோசேப் அவர்களினால் ஆரம்பி க்கபட்டது. கிருபை சுவிசேஷ சபையின் ஆரம்பத்துக்கும் வளர்ச்சிக்கும் சில ஒத்த கொள்கைகளையுடைய திருச்சபைகளின், வேறுசில தனிப்பட்ட ஊழியர்களின், விசுவாசிகளின் உதவிகளையும், நாளடைவில் எங்கள சபையினரின் உதவிகளை ஒத்தாசைகளையும் கர்த்தர் பாவித்திருக்கிறார், இன்னும் பாவிக்கிறார். தேவநாமம் ஒன்றே மகிமைப்படுவதாக.